ஏப்ரலில் பட்டா வாங்கப்போகும் ‘புறம்போக்கு’..!

207

          

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, ஷாம், விஜய்சேதுபதி நடிப்பில் மல்டி ஸ்டாரர் படமாக தயாராகி வரும் புறம்போக்கு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் வேலைகள் துரித கதியில் நடந்து வருகின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லரும் அதில் இடம்பெற்றுள்ள ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்கின்றன.

யுடிவியும் பைனரி பிக்சர்சும் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தின் கதாநாயகியாக கார்த்திகா நடித்திருக்கிறார். இந்த மாத இறுதிக்குள் சென்சாருக்கு படத்தை அனுப்ப வேண்டும் என்பதால் அது தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை நடைபெற்று வருகிறது. படத்தை ஏப்ரல் முதல்வாரத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார் யுடிவி தனஞ்செயன்.

Comments are closed.