பெண்கள் மட்டுமே நடிக்கும் படத்தில் ‘மாபியா சசிக்கு என்னயா வேலை..!

225

 

மலையாளத்தில் இயக்குனர் லோகிததாஸ் ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட முப்பதுக்கும்   மேற்பட்ட  படங்களை   இயக்கி, ஓரளவு டீசன்டான டைரக்சன் ஹிஸ்டரி வைத்திருப்பவர் பிரபல இயக்குனர்  துளசிதாஸ். இப்போது இவர்   தமிழில்   இயக்கும்  படம் தான்  ‘இனி வரும் நாட்கள்’. சரி.. கதாநாயகன் யார் என இயக்குனரை கேட்டால், படத்தின்  திரைக்கதை தான் ஹீரோ என்கிறார் இயக்குனர் துளசிதாஸ்..

காரணம் இப்படத்தில் முழுக்க, முழுக்க  பெண்கள்  மட்டுமே  நடித்திருக்கிறார்கள் ஒரு இடத்தில் கூட ஆண்கள் நடிக்கவில்லையாம். அதற்காக குடும்பப்படமோ என நினைத்துவிடாதீர்கள்.. பாட்டு , சண்டை காமெடி  என்று பொழுதுபோக்கு அம்சங்களும் படத்தில் நிறைய இருக்கிறது. டாக்குமெண்டரி  எடுக்கப்போகும்  கல்லூரி மாணவிகளின் பயணத்தில் நடக்கும் எதிர்பாராத சம்பவமும், அதை  தொடர்ந்து நடக்கும் அதிர்ச்சிகளும் தான் படத்தின் சஸ்பென்ஸ் கலந்த  திரில்லர்  கதை.

அதனால் தான் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை மாபியா சசி கவனித்துக்கொள்கிறார். இனியா,  ஆர்த்தி,  சுபிக்சா,  ஈடன், அர்ச்சனா ஆகியோர்  கதாநாயகிகளாக  நடிக்கிறார்கள். இவர்கள் தவிர முக்கிய  கதாபாத்திரத்தில் நதியா  நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு  கம்பம்,  நாகர்கோவில், தேக்கடி  ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது .

Comments are closed.