பொங்கல் தொடர் விடுமுறையில் கிடைத்த ஐந்து நாட்கள் ஓப்பனிங்கில் உலகம் முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட 135 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் வெளியான ‘ஐ’.. இதில் தமிழ்நாட்டில் 40கோடி, ஆந்திராவில் 31கோடி, கேரளாவில் 1௦.75 கோடி வசூலித்திருக்கிறது. தெலுங்கு வசூல் கைகொடுத்தது போல, 16ஆம் தேதி இந்தியில் வெளியாகிய ‘ஐ’ அங்கேயும் டீசன்டான கலக்சனை அள்ளியிருக்கிறது.
இதுவரை விநியோகஸ்தர்கள் தரப்பிற்கு அவர்களது முதலீட்டில் பாதிக்கும் மேல் கலெக்சன் கைக்கு வந்துவிட்டதாக சொல்கிறார்கள். பொங்கல் கூட்டத்தில் சிக்க விரும்பாத பேமிலி ஆடியன்ஸ் இனி மேல்தான் தியேட்டருக்கு வர ஆரம்பிப்பார்கள். அதற்கேற்ற மாதிரி ஜன-29ல் அஜித் படம் வெளியாகும் வரை வேறு எந்த படமும் ரிலீஸ் இல்லை என்பதால் வரும் பத்து நாட்களுக்குள் ‘ஐ’ எதிர்பார்த்த கலெக்சனையும் தாண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
Comments are closed.