யூடியூப்பில் படத்தை ஒளிபரப்பும் ஜே.எஸ்.கே பிலிம்ஸ்..!

194

 

நம்ம ஊரில் தான் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்காதவர்கள் ஏதாவது ஒரு சேனலில் அந்தப்படத்தை போடும்போது பார்த்துக்கொள்வார்கள்.. பொறுமையில்லாதவர்கள் திருட்டு டிவிடிக்கு தாவுவார்கள். ஆனால் பாலிவுட்டிலோ யூடியூப், டிடிஎச், கூகுள் பிளே உட்பட டெக்னாலஜியுடன் பல வழிகளில் புதுப்படத்தை பார்க்க வழி செய்திருக்கிறார்கள்..

ஆனால் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஸ்குமார் தமிழிலும் முதன்முறையாக அப்படி ஒரு முயற்சியை எடுத்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘வேலுபிரபாகரனின் காதல் கதை’ என்ற படத்தை பரிசோதனை முயற்சியாக ஜே.எஸ்.கே பிலிம்ஸுக்கு சொந்தமான யூடியூப்  தளத்தில் இன்று முதல் பார்க்க வகைசெய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இன்னும் சில படங்களும் யூடியூப்பில் அணிவகுக்க இருக்கின்றன.

Comments are closed.