“நன்றி மறந்தார்.. உண்மையை மறைக்கிறார்” – பிருத்விராஜ் மீது மலையாள இயக்குனர் தாக்கு..!

181

 

மலையாள திரையுலகில் 90களில் கொடிகட்டி பறந்த இயக்குனர் ராஜசேனன். நம்ம ஊர் வி.சேகரைப்போல குடும்ப படங்களாக எடுத்து தள்ளியவர். ஜெயராமை வைத்து மட்டும் 16 படங்களை இயக்கி அதில் 14 படங்களை ஹிட்டாக்கியவர்.. அவர்தான் இப்போது இப்போது பிருத்விராஜைப்பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்திருக்கிறார்.

அதற்கு இரண்டு காரணங்கள்.. தொடர்ந்து தொல்விப்படங்களாக கொடுத்ததால் கடந்த பல வருடங்காக பட வாய்ப்பின்றி இருக்கும் ராஜசேனன் ஒரு ஹிட் கொடுத்துவிடலாம் என நினைத்து பிருத்விராஜை அணுகி கால்ஷீட் கேட்க அவரோ அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லையாம்.

இன்னொரு விஷயம். பிருத்விராஜ் எப்போதுமே பெட்டிகளில் அவரது முதல் படமாக ‘நந்தனம்’ படத்தை குறிப்பிடுகிறார். ஆனால் அவர் ராஜசேனன் இயக்கத்தில் அறிமுகமாகிய, நந்தனம் படத்திற்கு ஆறு மாதம் முன்னரே வெளியான படத்தை பற்றி எங்கேயும் வாய் திறப்பதில்லை.

இந்த இரண்டு விஷயங்களும் தான் ராஜசேனன் மனதை ரொம்பவே பாதித்து விட்டதாம். ஆனாலும் பிருத்விராஜ் நல்ல நடிகர், ஆரம்பத்தில் சில தவறான படங்களை தேர்ந்தெடுத்தாலும் தற்போது சரியான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறார் என பிருத்விக்கு புகழாரம் சூட்டவும் அவர் தயங்கவில்லை.

Comments are closed.