
நாம் விளையாடும் கில்லி விளையாட்டு தான் வெளிநாட்டுக்கு சென்று கிரிக்கெட்டாக மாறியது. அதேபோல சிவகங்கை பகுதியில் பிரபலமான ஐவராட்டம் என்கிற விளையாட்டு தான் புட்பால் என்கிற உலக விளையாட்டாக மாறியிருக்கிறது. இந்த உண்மையை உரக்கச்சொல்லும் படமாக ‘ஐவராட்டம்’ படம் உருவாகியிருக்கிறது.
குணச்சித்திர நடிப்ப்பில் ராஜநடை போடும் நடிகர் ஜெயபிரகாஷ் இதில் முக்கிய வேடத்தில் நடிப்பது சிறப்பு என்றால், அவரது இரண்டு மகன்களான துஷ்யந்தும், நிரஞ்சனும் இந்தப்படத்தில் இளம் ஹீரோக்களாக அறிமுகமாகியுள்ளது இன்னொரு சிறப்பு.. கதாநாயகியாக ஆந்திராவை சேர்ந்த நித்யா ஷெட்டி நடிக்கிறார்.
மிதுன் மாணிக்கம் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு சுவாமிநாதன் என்பவர் இசையமைத்து, இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவர் வேறு யாருமல்ல.. பிரபல கடம் வித்வானான விக்கு விநாயகத்தின் பேரனும் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்திற்கு இசையமைத்த செல்வகணேஷின் மகனும் ஆவார்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சுவாமிநாதனை வாழ்த்த அவரது தாத்தாவும் தந்தையும் வந்து மூன்று தலைமுறை இசை சங்கமத்தை மேடையில் நிகழ்த்தினர். அப்பாவுக்கு அறிமுகப்படமாக கபடி படம் கிடைத்தது போல, அவரது மகனுக்கு புட்பால் படம் கிடைத்திருப்பதும் ஆச்சர்யமான விஷயம் தான்.
Comments are closed.