ரஜினிக்கு வழிவிட்டு ஒதுங்கிய லாரன்ஸ்…!

260

 

‘முனி’ படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றிப்படங்களாக்கிய லாரன்ஸ், அடுத்ததாக முனி-3யான கங்காவையும் பக்கவாக தயார் செய்துவிட்டார். இந்தப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார். இந்தப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, டிசம்பரில் வெளியிட தயாராக இருந்தார்.

காரணம் லாரன்ஸின் படங்களுக்கு குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை ‘காஞ்சனா’ வாங்கித்தந்துவிட்டது. அதனால் டிசம்பரில் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் தேர்வு விடுமுறைகள் வருவதால் படத்தை அப்போது ரிலீஸ் செய்தால் லாபத்தை சிந்தாமல் சிதறாமல் அள்ளலாம் என்பது அவரது எண்ணம்.

ஆனால் டிசம்பரில் ரஜினியின் ‘லிங்கா’ வெளியாவதால் அதன் தாக்கம் குறைந்தபட்சம் இருபது நாட்களாவது இருக்கும். இதற்கிடையில் ‘ஐ’ வேறு தயாராக இருக்கிறது. சரி பொங்கலுக்கு வெளியிடலாம் என்றால் அஜித், கமல் படங்கள் தயாராக இருக்கின்றன. அதனால் வேறு வழியின்றி அடுத்தவருடம் பிப்ரவரிக்கு ரிலீஸை தள்ளி வைத்துவிட்டாராம் லாரன்ஸ்.

Comments are closed.