
கடந்த 2009ஆம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான ‘பழசிராஜா’விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான ‘பழசிராஜா’வை பிரபல டைரக்டர் ஹரிஹரன் இயக்கியிருந்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
தற்போது எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய இன்னொரு நாவலும் திரைப்படமாக உருவாக இருக்கிறது.. எம்.டி.வாசுதேவ நாயர் 1984ல் எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மற்றொரு நாவல் தான் ‘ரந்தமூழம்’. மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் பீமனின் கண்ணோட்டத்தில் கதையை விவரிப்பதாக எழுதப்பட்டிருந்தது.
அறிமுக இயக்குனர் ஸ்ரீகுமார் இயக்கும் இந்தப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. இரண்டு பாகங்களுக்கும் கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் பட்ஜெட் என்கிறார்கள். முதல் பாகத்தில் பாண்டவர்கள், கௌரவர்களின் இளம்பருவத்தை காட்ட இருக்கிறார்களாம். இதில் கதாநாயகனாக மோகன்லால் நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே உறுதியான செய்திதான்.
ஆனால் இதில் இன்னொரு வலுவான கதாநாயகன் தேவைப்பட நம் விக்ரமை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். விக்ரம் ஏற்கனவே நிறைய மலையாளப்படங்களில் நடித்திருக்கிறார். மம்முட்டி, சுரேஷ்கோபியுடன் இணைந்தும் நடித்திருக்கிறார். ஆனால் மோகன்லாலுடன் இணைவது இதுதான் முதல்முறை. அதேபோல 2000க்கு பிறகு வனவாசம் சென்று திரும்பிய மாதிரி மீண்டும் மலையாளத்தில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments are closed.