பிறந்தநாளில் நீர்நிலைகளை சுத்தப்படுத்த களம் இறங்கும் கமல்..!

179

பிரதமர் மோடி ஆரம்பித்துவைத்த ‘தூய்மை இந்தியா’ திட்டம் பற்றியும் அதில் இணையும்படி நமது தமிழகத்தில், குறிப்பாக திரையுலகத்தில் இருந்து கமலுக்கு அவர் விடுத்த அழைப்பும் உங்களுக்கு தெரியும். அதன் ஒரு பகுதியாக கமல் தனது பிறந்தநாளான நவ-7ஆம் தேதி சென்னையில் உள்ள நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியை ஆரம்பித்து வைக்கிறார்.

இந்தப்பணியினை மேற்கொள்பவர்கள் கமலின் நற்பணி இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் தான். இந்த திட்டத்தின் முதல் படி முதலில் தாம்பரம் வேளச்சேரி சாலையில் ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பு அருகில் உள்ள மாதம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்தப்படுத்தும் பணி தொடங்க இருக்கிறது.

இந்த சமயத்தில் கமல் அவர்களுடன் கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்த இருக்கிறார். அவருடன் அவருடைய திரையுலக நண்பர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதே நாளில் மாலை 3 மணியளவில் தூர்தர்ஷன் எதிரே உள்ள அண்ணா நினைவரங்கத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் கமல்.

Comments are closed.