கேரளா ரசிகர் மறைவுக்கு விஜய் இரங்கல்..!

183

தமிழ் இளம் முன்னணி நடிகர்களை பொறுத்தவரை கேரளாவில் அதிகம் ரசிகர்கள் செல்வாக்கு உள்ள நடிகர் விஜய் தான். விஜய் படம் ரிலீசாகும்போது அங்கே உள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் கூட ரிலீசாகாமல் பார்த்துக்கொள்வார்கள்.

அதேபோல விஜய் பட ரிலீஸ் கொண்டாட்டத்தில் கேரளா ரசிகர்களும் சளைத்தவர்கள் அல்ல. விஜய் படம் ரிலீஸாகும் தினத்தில் கட் அவது வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என அமர்க்களம் செய்துவிடுவார்கள்.. ஆனால் இந்த தீபாவளி தினத்தன்று விஜய்யின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த வடக்கஞ்சேரியை சேர்ந்த ஸ்ரீ உன்னிகிருஷ்ணன் என்பவர் கீழே தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிகழ்வால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த விஜய் அந்த ரசிகரின் குடும்பத்துக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அந்த செய்தியில், “உன்னிகிருஷ்ணனின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. ஆனால் அவரது உருவம் என் இதயத்தில் எப்போதும் நிலைத்திருக்கும்.. தயவு செய்து ரசிகர்கள் இனிவரும் காலத்தில் இதுபோன்று உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் மன வருத்தத்தில் தள்ளவேண்டாம்” என வருத்ததுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜய்.

Comments are closed.