கலிபோர்னிய சிங்கத்தை சந்தித்த சென்னை சிங்கம்..!

185

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, ஹாலிவுட்டின் அதிரடி மன்னனும் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் நேற்று அதிகாலை மூன்று மணிக்கே சென்னை வந்து இறங்கினார்.

அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த லீலா பேலஸ் ஹோட்டல் அருகில் தான் நடிகர் சூர்யாவின் வீடும் இருக்கிறது. அர்னால்டு ஹோட்டலை வந்தடைந்த தகவல் தெரிந்ததும், உடனே ஹோட்டலுக்கே சென்று அர்னால்டை சந்தித்து மகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்து அவரை வரவேற்றார் சூர்யா.

Comments are closed.