
சுசீந்திரன்-விஷ்ணு கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் தான் ‘ஜீவா’. கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப்படத்தை ஆர்யா தயாரித்திருப்பதும் அதை விஷால் வாங்கி வெளியிடுவதும் இந்தப்படத்திற்கு கிடைத்த செலவில்லாத பப்ளிசிட்டி. டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
வழக்கமான கிரிக்கெட், கடைசி பந்தில் ஹீரோ ஜெயிப்பது போன்ற விஷயங்கள் இல்லாத கிரிக்கெட்டை ஒரு புதிய கோணத்தில் அலசியிருக்கும் படமாக இது இருக்கும் என்கிறார் சுசீந்திரன். அதாவது திறமை இருந்தாலும் கூட ஒருவர் கிரிக்கெட் வீரர் ஆவதற்குள் என்னனென்ன தடைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என டீடெய்லாக சொல்லியிருக்கிறாராம் சுசீந்திரன்.
அதற்கு கட்டியம் கூறும் வகையில் ட்ரெய்லரில் கடைசியாக இடம் பெற்றுள்ள “மத்த நாட்டுல எல்லாம் விளையாடித்தான் தோற்கிறாங்க.. நம்ம ஊர்லதான் திறமைசாலியா இருந்தும் தேர்வாகாமலே தோற்கிறாங்க” என்கிற பஞ்ச் வசனத்தை பார்க்கும்போது கிரிக்கெட் தேர்வில் நடைபெறும் அரசியலை சொல்லியிருக்கிறாரா சுசீந்திரன் என ஒரு ஆர்வம் ஏற்படுகிறது.
Comments are closed.