
சூப்பர்ஸ்டார்கள் தான் என்றாலும் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என உதவி செய்யும் வகையை சேர்ந்தவர்கள் தான் ரஜினி, மோகன்லால் ஆகியோர். ஆனால் சில நேரம் அதை பகிரங்கமாக செய்யும்போது அதன் பலன் இன்னும் அதிகமாகும் என்பது உண்மை.
சமீபத்தில் கொச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் ஒரு மாத உணவுக்கான செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொன்ன மோகன்லால், அதற்காக அந்த மருத்துவமனை உணவுப்பிரிவிடம் ரூபாய் 10 லட்சம் வழங்குவதாக கூறினார்.
அதை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் அது சம்பந்தப்பட்ட ஒரு விழாவை நடத்தி அந்த விழாவுக்கு மோகன்லாலை வரவழைத்து அந்த தொகையை பெற்றுக்கொண்டது. இதன் காரணமாகவே உதவும் மனப்பான்மை உள்ள இன்னும் சிலரும் அன்றைய தினம் தங்களது பங்களிப்பை தந்துள்ளனர்.
இதனால் அன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளதாம்.. இதை அறிந்த நடிகை ரீமா கலிங்கல் இதுபோன்ற பணம் திரட்டும் நிகழ்ச்சிகளுக்கு, தான் ஒரு தூதராக இருந்து, பணம் திரட்ட உதவுவதாக தானே முன் வந்து கூறியுள்ளார்.
Comments are closed.