செப்-19ல் ‘அரண்மனை’ வாசல் திறக்கலாம்..!

216


 முறையாக வெளியிடுவதற்கு முன்பே தான் இயக்கியுள்ள ‘அரண்மனை’ படத்தின் டீசர் லீக்கான விவகாரம் இயக்குனர் சுந்தர்.சியை கொஞ்சம் அப்செட் ஆகவைத்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் சுதாரித்துக்கொண்ட சுந்தர்.சி, தனது படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் தற்போது மும்முரமாக இறங்கிவிட்டார்.

வரும் செப்டம்பர்-19ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள சுந்தர்.சி, அதற்கு முன்னதாக இன்னும் சில நாட்களுக்குள் படத்தின் ஆடியோ ரிலீசை நடத்திவிடவும் முடிவு செய்துள்ளாராம். சுந்தர்.சி, வினய், சந்தானம், ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சூரி என கமர்ஷியலான நட்சத்திரப்பட்டாளம் நிறைந்திருக்கும் இந்தப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார்.

Comments are closed.