நம்புங்கள் ரசிகர்களே.. ஜோதிகா ரிட்டர்ன்ஸ்..!

300

எப்போ, எப்போ என கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு… இதோ ஜோதிகா ஆரவாரமாக வெள்ளித்திரையில் மறு பிரவேசம் செய்கிறார் என்பதை உரக்க கூறுகிறோம்.. கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ?’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் ஜோதிகா நடிக்க இருக்கிறார்

ஜோதிகா போன்ற நல்ல நடிப்புத்திறமை வாய்ந்த நடிகைகள் திருமணத்திற்கு பிறகு அவ்வளவு எளிதாக நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் அப்படி அவர்கள் சம்மதித்தால் அது நிச்சயம் அவர்களை கட்டிப்போட்ட ஒரு கதைக்காகத்தான் இருக்கும். இங்கே ஜோதிகா விஷயத்தில் நடந்திருப்பதும் கூட அதேதான்…

இந்தக்கதை ஜோதிகாவுக்கு அமைந்ததில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. மலையாளத்தில் இருபது வருடங்களுக்கு முன் நடிப்பால் அனைவரையும் அசரடித்த மஞ்சு வாரியர் நீண்ட இடைவேளைக்குப்பின் மறு பிரவேசம் நிகழ்த்தியது இந்தப்படத்தின் மூலம் தான்.

பெண்ணின் பலத்தை, மகத்துவத்தை உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்டிருந்த இந்தப்படம் மஞ்சு வாரியருக்கு அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுத் தந்ததோடு அவரது ரீ-எண்ட்ரியை வெற்றிகரமானதாகவும் அதேசமயம் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கியுள்ளது.

ஜோதிகாவிற்கும் இந்தப்படம் ரீ-எண்ட்ரியாக அமைந்திருப்பது மிகவும் எதார்த்தமான ஆனால் அதிசயமான ஒன்று. மஞ்சுவுக்கு கிடைத்த அதே பாராட்டுக்கள் இங்கே ஜோதிகாவுக்கும் குவியும் என்பதில் நமக்கென்ன சந்தேகம்?

இந்தப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. தமிழில் இந்தக்கதையை அதன சாராம்சம் கெட்டுவிடாமல அப்படியே கொடுக்கவேண்டும் என்பதற்காக மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூசே தமிழிலும் இயக்குகிறார் என்பது இன்னொரு ஆறுதலான விஷயம்.

Comments are closed.