நந்திதாவை மயக்கிய ஐஸ்வர்யா..!

204

இரண்டு நடிகைகள் அதிலும் வளர்ந்துவரும் நடிகைகள் நட்பாக இருப்பது தமிழ்சினிமாவில் ரொம்பவே அபூர்வமானது. ஆனால் அப்படிப்பட்ட நட்பை இன்று நடைபெற்ற ‘திருடன் போலீஸ்’ இசைவெளியீட்டு விழாவில் காண முடிந்தது.

எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் திருடன் போலீஸ். ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அதே ‘அட்டகத்தி’ புகழ் ஐஸ்வர்யா. இன்று காலை நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த பல சிறப்பு விருந்தினர்களில் ‘அட்டகத்தி’ நந்திதாவும் ஒருவர்.(எப்பா சீக்கிரம் இந்த ‘அட்டகத்தி’ அடைமொழிய விட்டு வெளிய வாங்கப்பா).

மேடையேறி ‘திருடன் போலீஸ்’ படக்குழுவினரை வாழ்த்திய நந்திதா ஐஸ்வர்யா புராணம் தான் பாடினார். “இந்த விழாவுக்கு நான் வந்தது ஐவர்யாவுக்காகத்தான். அட்டகத்தியில் இருந்தே இருவரும் திக் பிரண்ட்ஸ் ஆகிவிட்டோம்.. தினேஷ் கூட அட்டகத்தியை விட இந்தப்படத்தில் ஆளே மாறி ஸ்டைலாக இருக்கிறார்” என ஐஸ்வர்யாவுடன் சேர்த்து போகிற போக்கில் தினேஷுக்கும் ஐஸ் வைத்துவிட்டு போனார்.

Comments are closed.