“நான் தொட்டேன்.. அது இன்றும் தொடர்கிறது” – ‘தொட்டால் தொடரும்’ விழாவில் ஏ.எம்.ரத்னம் சுவாரஸ்யம்

300


இணையதள விமர்சகரான நம்ம கேபிள் சங்கர், ரிலீசாகுற ஒவ்வொரு படத்தையும் அக்குவேறா, ஆணிவேறா பிரிச்சு மேய்ஞ்சுடுவாரு. இப்ப அவரே ஒரு படத்தை டைரக்ட் பண்ணி முடிச்சிட்டாரு. படத்தோட பேரு ‘தொட்டால் தொடரும்’. இந்தப்படத்தில் தமன், அருந்ததி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்தப்படத்தை துவார் சந்திரசேகர் தயாரித்துள்ளார். இது இவர் தயாரிக்கும் ஐந்தாவது படம்.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், கேயார், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உட்பட திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் படக்குழுவினரை வாழ்த்திப் பேசிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஒரு சுவராஸ்யமான தகவலை குறிப்பிட்டார். “பொதுவாக இசைவெளியீட்டு விழாக்களை ப்ரிவியூ தியேட்டர்களில் தான் நடத்திக்கொண்டிருந்தார்கள். 1996ல் கமலை வைத்து ஷங்கரின் டைரக்ஷனில் ‘இந்தியன்’ படத்தை நான் தயாரித்தபோது ஏன் சத்யம் தியேட்டரில் இசைவெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தக்கூடாது என்று நினைத்து, இங்கேதான் நடத்தினேன். சத்யம் தியேட்டரில் நடந்த முதல் இசைவெளியீட்டு விழா அதுதான். அன்று நான் தொட்டது, இன்றுவரை தொடர்கிறது.. அந்தவகையில் எனக்கு சந்தோஷமே” என்று கூறினார்.

Comments are closed.