ஹேப்பி பர்த்டே முனீஸ்காந்த்..!

212

சமீபத்தில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, சில தினங்களுக்கு முன் படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்துவிட்டு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினியை படத்தில் நடித்த ஒரு நபர் மிகவும் கவர்ந்துவிட்டார்.

அவர் வேறு யாருமல்ல.. படத்தில் சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசையில் ஊருக்குள் அதகளம் பண்ணும் முனீஸ்காந்த் கேரக்டரில் நடித்திருந்த ராம்தாஸ் தான். காரணம் முனீஸ்காந்த்தாக வந்து லூட்டி அடிக்கும் ராம்தாஸின் காட்சிகள் எல்லாமே செம அலப்பரை.

ராம்தாஸ் வரும் காட்சிகள் எல்லாமே சிரிப்பை வரவழைக்க தவறவில்லை. ராம்தாஸுக்கு தமிழ்சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இன்று பிறந்தநாள் காணும் ராம்தாஸ் @ முனீஸ்காந்த்துக்கு நமது behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.