மாணவர்களின் கல்விக்கு உதவும் கானா பாலா..!

206


டோண்ட் வொரி.. டோண்ட் வொரி.. பி ஹேப்பி” என கரகரகுரலில் காந்தம் வைத்து ரசிகர்களை தன் பக்கம் சுண் டி இழுப்பவர் கானா பாலா. தனது கானா பாடல்கள் மூலம் பிரபலமாகி இன்று உலகம் முழுக்க பறந்து கொண்டிருக்கிறார் கானாபாலா.

இது கானா பால்வின் ஒரு முகம் தான். அவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அது வள்ளல் முகம். அவர் பாட்டுப்பாடி சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை நிறைய சமூக நற்பணிகளுக்காக செலவழிக்கிறார். குறிப்பாக கல்விப்பணிகளுக்காக நிறைய உதவிகள் செய்து வருகிறார்.

இந்த வருடம் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது மார்க் பட்டியலுடன் வந்து காண்பித்தால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்குகிறார். வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் இவர் சுமார் 800 பேருக்கு மேல் உதவித்தொகை வழங்க திட்டமிட்டு இருக்கிறார். அந்தவகையில் இதுவரை 500 பேருக்கு மேல் உதவித்தொகை வழங்கி இருக்கிறாராம். தொடரட்டும் கானா பாலாவின் கல்விப்பணி.

Comments are closed.