கார்த்திக் சீனிவாசனுக்கு சோனி நிறுவனம் வழங்கிய கௌரவம்..!

212


கேமரா தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சோனி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஒமேகா வகை கேமராக்களின் பிராண்ட் தூதராக தென்னிந்தியாவில் பிரபலமாக விளங்கும் புகைப்பட கலைஞர் கார்த்திக் சீனிவாசனை நியமித்து கௌரவப்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கார்த்திக் சீனிவாசன் சினிமாவில் ஒளிப்பதிவாளராக வேண்டும் என சென்னைக்கு வந்தவர். புகைப்படம் எடுப்பதில் லைட்டிங் அமைப்பதிலும் இன்னும் பல டெக்னிகல் முறைகளை கையாள்வதிலும் வல்லவர்.

பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ள இவரின் பணி சோனியின் புதிய தயாரிப்பான ஒமேகா வகை கேமராக்களை பற்றி இந்தியா மட்டுமல்ல.. உலகெங்கிலும் கருத்தரங்கு மற்றும் பயிற்சி அரங்கு நடத்துவதுதான்..

சொல்லப்போனால் போட்டோகிராஃபியின் மீது அளவற்ற காதல் கொண்ட கார்த்திக் சீனிவாசனுக்கு சோனி அளித்துள்ள இந்த பொறுப்பு மிகச்சரியானதே என்றுகூட சொல்லலாம்.

“சோனி எனக்கு மிகப்பெரிய கௌரவத்தை வழங்கியுள்ளது. இதன்மூலம் ஜப்பானிய கேமரா வல்லுனர்கள் மற்றும் உலக அளவில் கேமராவை கையாள்வதில் திறமை வாய்ந்த நபர்களிடம் இன்னும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு சோனி நிறுவனத்தால் கிடைத்துள்ளது” என்கிறார் கார்த்தி சீனிவாசன்.

Comments are closed.