ஆர்யன் ஷான் முன்னிலையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மூளைடானிக் வழங்கும் விழா! – அமைச்சர் வெங்கட்டரமணன் அறிமுகப்படுத்தினார்
பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம். மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின் நிர்வாகத்தை முன்னெடுத்துவரும் நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் குழந்தைகளுக்கான ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மூளைடானிக்கையை அமைச்சர் வெங்கட்டரமணன் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த அறிமுக விழா குழந்தைகளின் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, நினைவாற்றல். கவனம் செலுத்தும் திறன். மற்றும் அறிவாற்றல், ஆயுர்வேத கோட்பாடுகளின் அடிப்படையில் மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஸ்வர்ண பிராசன மருந்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான முயற்சியாக அமைந்தது. இந்த விழாவில் மருத்துவ நிபுணர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய ஆர்யன் ஷாம், “தமிழ்த் திரைப்படத்துறையில் நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தாலும். உண்மையான ஆயுர்வேத மருத்துவ சேவையை ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் எளிதில் சென்றடைய செய்வதே எங்கள் நோக்கம்.” என்றார்.
சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் ‘சுபாஷ்’ திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து, சுபாஷ் சந்திர போஸ் வேடத்தில் நடித்து வரும் ஆர்யன் ஷாம், அப்படத்தை உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியியிட திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.