‘வள்ளுவன்’ விமர்சனம்

41

நடிகர்கள் : சேத்தன் சீனு, ஆஷ்னா சாவேரி, பிரேம்குமார், சாய் தீனா, மனோபாலா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா
இசை : அஸ்வத்
ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா
இயக்கம் : சங்கர் சாரதி
தயாரிப்பு : ஆறுபடை புரொடக்‌ஷன்ஸ் – சைல்குமார் ராஜேந்திரன்

அரசியல்வாதி, போலீஸ் இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர் ஆகியோரை முகமூடி அணிந்த மர்ம மனிதர் கொடூரமாக கொலை செய்கிறார். இந்த தொடர் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு காவல்துறை அதிகாரி பிரேம்குமாருக்கு, உணவு டெலிவரி வேலை செய்யும் நாயகன் சேத்தன் சீனு மீது சந்தேகம் ஏற்படுகிறது.

சேத்தன் சீனு கொலை செய்ததற்கான எந்தவிதமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், சில விசயங்கள் அவரை கொலையாளிக்க, அவரை கைது செய்து விசாரிக்கும் போது அவர் கொலை செய்யவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது. அப்படியானல் உண்மையான கொலையாளி யார் ? , இந்த தொடர் கொலைகளுக்கான பின்னணி என்ன? , இதில் நாயகன் சேத்தன் சீனு எப்படி சிக்கினார் ? ஆகிய கேள்விகளுக்கான பதில் தான் படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் சேத்தன் சீனு, முதல் முறையாக குத்தாட்டம் போட்டு, வட சென்னை இளைஞராக நடித்தாலும், சில காட்சிகளுக்குப் பிறகு பொறுப்பான இளைஞராக தன் வேலையை சரியாக செய்திருக்கிறார். குத்தாட்டம் மட்டும் இன்றி ஆக்‌ஷனிலும் அசத்தியிருக்கும் சேத்தன் சீனு, தன் வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சாவேரி, ஆரம்பத்தில் வழக்கமான கமர்ஷியல் நாயகியாக வலம் வந்தாலும், இறுதியில் அவர் எடுக்கும் அவதாரம் எதிர்பார்க்காத ஒன்று.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரேம்குமார், காவலராக நடித்திருக்கும் மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் தங்கள் வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, சென்னை நகரத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அஸ்வத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.

யூகிக்க கூடிய திரைக்கதை என்றாலும், அதை தன்னால் முடிந்த வரை திருப்பங்களோடும், எதிர்பார்ப்புடனும் பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்.

எழுதி இயக்கியிருக்கும் சங்கர் சாரதி, பெண்களுக்கு எதிராக அநீதி இழப்பவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படாமல் எளிதில் தப்பித்து விடுவதையும், அதிகாரமும், சட்டமும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியிருப்பதோடு, இத்தகைய குற்றவாளிகளுக்கு சட்டத்தை தாண்டிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

ரேட்டிங் 3/5

Comments are closed.