நடிகர்கள் : நவீன் சந்திரா, சனத், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, சித்து, விது, நவயுகா, சுவாதி கிருஷ்ணன், கயல் வின்செண்ட், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, ரோஹித் கொகிட்
இசை : கே
ஒளிப்பதிவு : செல்வரத்னம் பிரதீபன்
இயக்கம் : சோமிதரன்
தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் – கார்த்திகேயன்.எஸ், கார்த்திக் சுப்பராஜ்
தமிழ் ஈழத்தில் இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த 80-களில் கதை நடக்கிறது. திருமண வீடு ஒன்றின் அருகே இரவு நேரத்தில் முகாமிடும் இந்திய ராணுவப்படை, போராளிகளிடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள அந்த வீட்டுக்குள் நுழைகிறார்கள். இராணுவ நடமாட்டம் இருப்பதை அறிந்துக் கொள்ளும் போராளிகள் படையும் அந்த வீட்டை சுற்றி வளைத்து, தாக்குதலுக்கு தயாராகிறது. ஒரு பக்கம் ராணுவம், மறுபக்கம் போராளிகள் என போர்ச்சூழலில் சிக்கிக்கொள்ளும் திருமண வீட்டாரின் நிலை என்ன ஆனது ? என்பதை உண்மைக்கு நெருக்கமாகவும், பரபரப்பாகவும் சொல்வதே ‘நீளிரா’ படத்தின் மீதிக்கதை.
நீளிரா என்றால் நீண்ட இரவு என்பதன் சுருக்கமாகும். ஒரு இரவில் கதை நடந்தாலும், பல வருடங்களாக நடந்த ஈழப் போரியின் முடி வடிவத்தையும் மிக நேர்த்தியாக திரை மொழியில் சொல்லியிருக்கும் இயக்குநர் சோமிதரன், யுத்தமும், இரத்தமும் இன்றி போர்ச்சுழலையும், அதனுள் சிக்கிய மக்களின் வலி மற்றும் மன போராட்டங்களை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இந்திய அமைதிப்படை வீரராக நடித்திருக்கும் நவீன் சந்திரா தன் வேலையை சரியாக செய்திருக்கிறார். போராளி படையின் தலைவராக நடித்திருக்கும் சனத்தும் தனது பணியை சிறப்பாக செய்து கவனம் ஈர்க்கிறார்.
ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, ஈழ மக்களின் மன போராட்டங்களை தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் தெளிவாக பிரதிபலித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பார்த்திபன், இரவு நேர காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். கே இசையில் பாடலும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.
ஒரு இரவில் நடக்கும் கதையில், ஈழப் போரின் முழு வரலாற்றையும் மிக தெளிவாக பேசியிருக்கும் இயக்குநர் சோமிதரன், ஈழ மக்கள் அனுபவித்த வலியை பார்வையாளர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிய வைத்து, படம் முழுவதும் ஒருவித படபடப்புடன் பார்க்க வைத்திருக்கிறார்.
ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த வலிகளை இரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தாமல், அமைதிப்படை என்ற பெயரில் அங்கு அட்டூழியம் செய்த இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள், அதை மேலோட்டமாக சொன்னாலும் அழுத்தமாக பதிய வைத்த முறை, ஈழ போரின் பின்னணி மற்றும் போராட்டம் வளர்ந்த விதம் என ஈழப் போரின் முழு வரலாற்றையும் மிக எளிமையாக சொன்னாலும், அதன் வலியை படம் பார்ப்பவர்கள் உணரக்கூடிய விதத்தில் சொல்லியிருக்கும் இயக்குநர் சோமிதரன், அதை மிக சுவாரஸ்யமாக சொல்லி, கமர்ஷியல் படத்திற்கான அடையாளத்தையும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
ரேட்டிங் 4.5/5
Comments are closed.