
உண்மையைச்சொன்னால் தற்போது காஜல் அகர்வாலின் கைவசம் ஒரே ஒரு தமிழ்ப்படம் மட்டுமே உள்ளது. இதுதவிர தெலுங்கில் கிருஷ்ணவம்சி டைரக்ஷனில் தனது ஃபேவரைட் ஹீரோ ராம்சரணுடன் ‘கோவிந்துடு அந்தாரிவாடலே’ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்கள் மட்டுமே இருப்பதால் இந்திப்பக்கம் பார்வையை திருப்பிய காஜலுக்கு அஜய் வர்மா இயக்கவிருக்கும் இந்திப்படத்தில் நடிக்க லக் அடித்திருக்கிறது. ஈரானியப்படமான சீஸ் ஃபயர்’ படத்தின் இந்தி ரீமேக்காக அதே பெயரிலேயே உருவாகிறது இந்தப்படம்.
இந்தப்படத்தில் ’3 இடியட்ஸ்’ படத்தில் நடித்த சர்மான் ஜோஷிதான் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்குமுன் ஸ்பெஷல்-26, சிங்கம் ஆகிய இந்திப்படங்களில் நடித்து தனது கொடியை ஏற்கனவே பறக்கவிட்டுள்ளார் காஜல்
Comments are closed.