பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் ’முன்தினம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணன்!

190

பவர் ஸ்டார்ர் கதாநாயகனாக நடிக்கும் ‘முன்தினம்’ படத்தை விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் லோகநாதன் எல்.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார். இதில் இயக்குநர் வேலு பிரபாகரன், சங்கர் கணேஷ், ராம் ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இவரக்ளுடன் யுவராஜ், ஷமிதா , சாவித்ரி, நெல்லை பெருமாள் , சித்திக் பாஷா, சில்வெஸ்டர் சிம்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஜீவா வர்ஷினி இசையமைத்திருக்கும் இப்படத்தை 25 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத் குமார் வெளியிட உள்ளார்.

இந்த நிலையில், ’முன்தினம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. போஸ்டரை நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணன் வெளியிட, படத்தின் நாயகன் பவர் ஸ்டார் பெற்றுக் கொண்டார்.

Comments are closed.