கேப்டன் விஜயகாந்த் இறப்பு! – சோகத்தில் திரையுலகம்

212

நடிகரும், தேமுதிக வின் நிறுவனர் மற்றும் தலைவரான விஜயகாந்த், உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் (Pneumonia) அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார்.

மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதிலும் அவர் இன்று காலை (டிசம்பர் 28) காலமானார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்தின் மரணத்தால் ஒட்டு மொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்திருப்பதோடு, அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.

Comments are closed.