நடிகர்கள் : சுனைனா, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா, நிவாஸ் அதித்தன், பாவா செல்லதுரை, ரித்து மந்த்ரா, தீனா, கஜராஜ்
இசை : சதிஷ் நாயர்
ஒளிப்பதிவு : பவி கே.பவன்
இயக்கம் : டோமின் டி சில்வா
தயாரிப்பு : சதிஷ் நாயர்
வங்கியில் பணியாற்றும் நாயகி சுனைனாவின் கணவர், வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளையர்களால் கொலை செய்யப்படுகிறார். வங்கி கொள்ளை குற்றவாளிகளை பிடிப்பதில் காவல் துறை மெத்தனம் காட்டுகிறது. கணவரின் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் சுனைனா, அவர்களை தேடி செல்லும் ஆக்ஷன் பயணம் தான் ‘ரெஜினா’-வின் கதை.
ரெஜினா கதாபாத்திரத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனைனா, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கணவரின் கொலைக்கு நியாயம் கிடைக்காத பட்சத்தில், தானே களத்தில் இறங்கி குற்றவாளிகளை கண்டறிந்து, போட்டு தள்ளும் காட்சிகளில் மிரட்டுகிறார்.
சுனைனாவின் கணவராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா, நிவாஸ் அதித்தன், பாவா செல்லதுரை, ரித்து மந்த்ரா, தீனா, கஜராஜ் என அனைவரும் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பவி கே.பவன், படம் முழுவதையும் ஆக்ஷன் உணர்வோடு பயணிக்க வைத்திருக்கிறார். சதிஷ் நாயரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது. படத்தொகுப்பாளர் டோபி ஜான் காட்சிகளை வேகமாக நகர்த்தினாலும், ஏதோ பெரிய படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் டோமின் டி சில்வா, வழக்கமான ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் கதையை நாயகியை மையப்படுத்தி சொல்லியிருக்கிறார்.
வழக்கமான பழிவாங்கும் கதை தான் என்றாலும், அதை வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கும் இயக்குநர் டோமின் டி சில்வா, சுனைனாவின் கொலைக்கான காரணத்தை யூகிக்க முடியாதபடி நகர்த்தி சென்றிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
சில குறைபாடுகள் இருந்தாலும், சுனைனாவின் கதாபாத்திரத்தை கையாண்ட விதம், முழு படத்தையும் ஆக்ஷன் உணர்வோடு பயணிக்க வைத்தது ஆகியவையால் ‘ரெஜினா’ – வை ரசிக்க முடிகிறது.
ரேட்டிங் 3/5
Comments are closed.