
விண்கல் ஒன்றால் தாக்கப்படும் ஒரே கிராமத்திலே அனைவரும் இன்னும் எட்டு நாளில் சாகப்போகிறார்கள் என்று தெரிந்தால் என்ன செய்வார்கள். அதைத்தான் அறிவியல்பூர்வமாக உணர்ச்சிகளை கலந்து ‘அப்புச்சி கிராமம்’ ஆக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் கதையை ஜினேஷ் என்பவர் எழுத, இந்தப்படத்தை இயக்கியிருப்பது ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த வி.ஐ.ஆனந்த். புதுமுகம் பிரவீன்குமார் ஹீரோ.. அனுஷா, சுவாசிகா, சுஜா என மூன்று ஹீரோயின்கள். படத்திற்கு பக்கபலமாக கஞ்சா கருப்பு, ‘கும்கி’ ஜோ மல்லூரி உட்பட பலர் நடித்துள்ளனர்..
ஐ கேட்ச் மல்டிமீடியா தயாரித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. படக்குழுவினரில் நடிகர் ஜோ மல்லூரி தவிர ஆண்கள் அனைவரும் வேட்டி, சட்டையும், பெண்கள் பட்டுப்புடவையும் அணிந்துவந்து ஆச்சர்யப்படுத்தினர்.
Comments are closed.