டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்படம்!

191

சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமானார். பிரபல இயக்குநர்கள் ஜெடி-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதாலா நடிக்க, விவேக், சுமன், நாசர், பிரபு, விஜயகுமார், லதா, குமாரி சச்சு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், தேவதர்ஷினி, மயில்சாமி, முனிஷ்காந்த், சிங்கம்புலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறார்கள்.

திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தி லெஜண்ட்’ திரைப்படம் தற்போது முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பார்க்கப்பட்டு வருகிறது.

Comments are closed.