ஹங்காமாவின் முதல் தமிழ் தொடர் ‘மாய தோட்டா’

366

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனமான ஹங்காமா, தனது முதல் தமிழ் தொடரான ‘மாய தோட்டா’-வை அறிமுகப்படுத்துகீறது.

சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் தொடரான இதில் பிரபல தமிழ் சின்னத்திரை பிரபலங்களான சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ் மற்றும் குமரன் தங்கராஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அமித் பார்கவ் டிசிபி ரஞ்சன் என்ற கதாபாத்திரத்தில் னடித்திருக்கிறார்.

ஒரு உயர்மட்ட வழக்கை விசாரித்து உண்மையான குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் டிசிபி ரஞ்சனுக்கு, அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு தக்குதல்கள் வர, அவற்றை கடந்து குற்றவாளியை பிடிப்பதில் அவர் காட்டும் தீவிரம் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.

யூகிக்க முடியாதபடி பல டிவிஸ்ட் மற்றும் சஸ்பென்ஸ்கள் நிறைந்த காட்சிகளோடு விறுவிறுப்பான தொடராக உருவாகியுள்ள ‘மாய தோட்ட’ தொடரின் கிளைமாக்ஸ் பார்வையாளர்களை திகைக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறதாம்.

இது குறித்து நடிகர் அமித் பார்கவ் கூறுகையில், “என்னிடம் தொடரின் திரைக்கதையை விவரிக்கப்பட்ட போது, என் மனம் புள்ளிகளை இணைக்க முயற்சிக்கும் சிக்கலைத் தீர்ப்பதற்கான முயற்சியில் குதித்து விட்டது. முடிவு எவ்வாறு இருக்கும் என்பது பற்றி என் மனம் யோசிப்பதோடு, நான் என் எண்ணத்திற்கு ஏற்றபடி ஒன்றை யூகித்தேன். ஆனால், அது அப்படி அமையவில்லை. பார்வையாளர்களும் தொடரை பார்க்கும் போது பல விதமாக யூகிப்பார்கள், ஆனால் அவர்களின் யூகங்கள் அனைத்தையும் கதையில் இருக்கும் திருப்புமுனைகள் பொய்யாக்கும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

’மாய தோட்டா’ ஒரு வசீகரிக்கும் கடிகாரத்தை உருவாக்குவதோடு, அதில் நடக்கும் ஒவ்வொரு சதியும், ஒவ்வொரு திருப்பங்களும் உங்களை கணிக்க முடியாத முடிவை நோக்கி பயணிப்பதோடு, ரசிகர்களை வியப்பின் உச்சத்திற்கு அழைத்து செல்லும்.” என்றார்.

Comments are closed.