இயக்குநரும் நடிகருமான ஆர்.என்.ஆர்.மனோகர் திடீர் மரணம்!

279

rnr-manohar
இயக்குநரும் நடிகருமான ஆர்.என்.ஆர்.மனோகர் இன்று திடீரென்று உயிரிழந்தார். அவருக்கு வயது 61.

1993ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு ‘கோலங்கள்’, விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படங்களுக்கு வசனம் எழுதினார். அப்படத்தில் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் 2009 ஆம் ஆண்டு நகுல், சுனைனா நடித்த ‘மாசிலாமணி’ மற்றும் நந்தா நடிப்பில் வெளியான ‘வேலூர் மாவட்டம்’ ஆகிய படங்களை இயக்கியவர் அதன் பிறகு பல படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்ஆர்.இளங்கோ வின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.