’கோமாளி’ இயக்குநரை ஹீரோவாக்கிய ஏஜிஎஸ் நிறுவனம்!

265

comali-director
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படத்தை இளம் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.

முதல் படத்திலேயே மிகப்பெரிய வசூல் ஈட்டிய படமாக கொடுத்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் பற்றி பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது அவர் தனது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை இயக்குவதோடு மட்டும் அல்லாமல், தானே ஹீரோவாகவும் நடிக்கிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றிய முதல் கட்ட தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளது.

Comments are closed.