‘கடமையை செய்’வதற்காக எஸ்.ஜே.சூர்யாவுடன் கூட்டணி சேர்ந்த யாஷிகா ஆனந்த்

199


மான்ஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கடமையை செய்’. இந்தப்படத்தில் கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். இதுவரை சிறிய அளவிலான கதாபாத்திரங்களில் நடித்துவந்த யாஷிகாவுக்கு, இந்தப்படத்தின் மூலம் தான் கதாநாயகி புரமோஷன் கிடைத்துள்ளது என்று கூட சொல்லலாம். மேலும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோரும் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.

இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து, நாயகனாக நடித்த ‘முத்தின கத்திரிக்கா’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜையில் கலந்துகொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் குத்துவிளக்கேற்றி, படப்பிடிப்பை துவைக்கி வைத்தார்.. படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

Comments are closed.