‘எண்ணி ஏழு நாள்’ – பையா கூட்டணி ரிட்டர்ன்ஸ்

222


2007ல் லிங்குசாமி டைரக்ஷனில் வெளியான ‘பையா’ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. சொல்லப்போனால் கார்த்தியை குழந்தைகள் அனைவரிடமும் கொண்டுபோய் சேர்த்த படமும் இதுதான்.

யுவனின் இசையில் உருவான ‘அட்டா மழைடா அடைமழைடா’ பாடல் இன்றும் கூட குட்டீஸ்களின் ஃபேவரைட் பாட்டாக இருக்கிறது. விஷயத்திற்கு வருவோம். இப்போது அதே ‘பையா’ கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கிறது. படத்தின் பெயர் எண்ணி ஏழு நாள்’. டைட்டிலை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருப்பதாக தோன்றுகிறதா,,?

பாட்ஷா படத்தில் ரகுவரனை பார்த்து ரஜினி சொன்ன சரித்திரப்புகழ் வாய்ந்த அதே டயலாக் தான். தற்போது சூர்யா நடித்துவரும் ‘அஞ்சான்’ படத்தை முடித்ததும் இந்தப்படத்தின் வேலைகளை ஆரம்பிக்கிறார் லிங்குசாமி. படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கிறார்.

Comments are closed.