அதர்வாவுக்கு வில்லனாக ஜாக்கிஷெராஃப்..!

200

ஜாக்கிஷெராஃப் இன்றும் பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத முக்கியமான நடிகர். தமிழில் நடிக்கவேண்டும் என்கிற இவரது ஆர்வத்துக்கு சரியான தீனி போட்டது தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம். அதைத்தொடர்ந்து கோச்சடையானில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, இதோ படமும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் சத்தமில்லாமல் மூன்றாவதாக ஒரு தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார் ஜாக்கிஷெராஃப். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் ‘கணிதன்’ படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடிக்கிறார். அதர்வாவுக்கு ஜோடி கேத்தரின் தெரசா. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ட்ரம்ஸ் சிவமணி இசையமைக்கிறார். சந்தோஷ் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்குமேல் முடிந்துவிட்டது.

Comments are closed.