விஜய் அறிமுகப்படுத்தும் அழகு விஞ்ஞானி..!

193

தான் இயக்கிவரும் ‘சைவம்’ படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டார் இயக்குனர் ஏ.எல்.விஜய். ‘தெய்வத்திருமகள்’ சாராவை மையப்படுத்தி இந்தக்கதையை பின்னியிருக்கும் விஜய் படத்தில் நாசரின் மகன் பாஷாவை முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துவதோடு வித்யா எனும் ஒரு அழகிய இளம் விஞ்ஞானியையும் அறிமுகப்படுத்துகிறார்.

தற்போது ஸ்டெம் செல் பயாலஜியில் பி.எச்.டி படித்துக்கொண்டிருக்கும் வித்யாவுக்கு இந்தப்படத்தில் முக்கியமான கேரக்டரை கொடுத்திருக்கிறார் விஜய். அதற்கேற்ற மாதிரி அற்புதமாக நடித்திருக்கிறாராம் வித்யா.. நடிப்பு அனுபவம் குறித்து சிலாகித்து பேசுகிறார் வித்யா.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா என கேட்டால், “நான் இப்போது மேற்கொண்டுவரும் கண்பார்வை சம்பந்தமான ஆராய்ச்சி படிப்பிற்குத்தான் முன்னுரிமை தருவேன். ஆனாலும் சைவம் போன்ற நல்ல கதைகள் அமையும்போது அதை மறுக்கவும் மாட்டேன்” என்கிறார்.

Comments are closed.