விஷாலுக்காக வசந்தபாலனுக்கு மேடையிலே பதிலடி கொடுத்த மிஷ்கின்..!

241

mishkin-vasanthabalan

தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’. 5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன்.

பிப்ரவரி 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் வசந்த பாலன் பேசும் போது, “சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்? சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டு பிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்” என உருக்கமாகவும் ஆவேசமாகவும் பேசினார்.

அடுத்ததாக பேசவந்த இயக்குனர் மிஸ்கின், “விஷால் உண்மையாகவே இரவு பகல் பார்க்காமல் தமிழ் ராக்கர்ஸ் எனும் கயவர்களை ஒழிக்க போராடி கொண்டு தான் வருகிறார். அதை நானே என் கண் கூடாக பார்த்துள்ளேன். இன்று வரை விஷால் அந்த திருடர்களை பிடிக்க முயற்சி செய்து தான் வருகிறார். ஆனால் அவர்களை பிடிப்பது என்பது கடினமான விஷயம். மரம், செடி, கொடி, பறவைகள் எப்படி இருக்கிறதோ அதே போல் தான் திருடர்கள் இருப்பதும் இயற்கை. வசந்த பாலனின் ஜெயில் திரைப்படம் வரும். அதையும் தமிழ் ராக்கர்ஸில் வெளியிட தான் செய்வார்கள். அது நல்ல படமாக இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என கூறினார்.

Comments are closed.