வெளி வந்த நாளில் இருந்தே ரசிகர்களின் விஸ்வாசத்தையும், பொது மக்களின் விஸ்வாசத்தையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் விஸ்வாசதையும் வென்ற “விஸ்வாசம்” படத்தில் நாயகன் அஜீத் குமாரின் வலது கரமாக வந்து “மெரிட்டு” என்கிற பாத்திரத்தில் ஜொலித்த ரோபோ ஷங்கர் அஜித் குமாரை பற்றி பேசும் போது சிலாகித்து கொள்கிறார்.
“அஜித் சாரை முதல் முறையாக படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் சந்தித்தேன். என் நலன் பற்றியும் ,குடும்பத்தை பற்றியும் நிறைய பேசினார். ஒரு ரசிகனாக அவர் ஒரு வருடத்தில் இரண்டு படமாகவது நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். புன்னகையோடு ஆமோதித்தார். நான் விஸ்வாஸம் வெளிவரும்போது மதுரையில் இருந்தேன்.
பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் முன்னரே வந்ததை போல ஒரு உணர்வு. என்ன கொண்டாட்டம், என்ன உற்சாகம்.இதெற்கெல்லாம் மூல காரணமான அவர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக வீற்று இருப்பது, அவர் மேல் உள்ள மரியாதையை கூட்டுகிறது.
அந்த எளிமையை நானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். அவருடன் இன்னமும் எத்தனை படங்கள் நடித்தாலும் எனக்கு ஒரு ரசிகனின் மன நிலை மாறாது. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி” என்கிறார் ரோபோ ஷங்கர்.

Comments are closed.