கார்த்தியின் ‘தேவ்’ டப்பிங் துவங்கியது..!

222

dev dubbing

பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ‘தேவ்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் துவங்கியது. நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலுமணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறது. ஏற்கனவே தேவ் படக்குழுவினர் குலுமணாலியில் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் அங்கே கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நில சரிவு காரணத்தால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் திரும்ப வந்தது நாம் அறிந்த ஒன்று.

அங்கே எடுக்கப்படாமல் விட்டுப்போன காட்சிகளை தற்போது மீண்டும் அங்கே படமாக்க உள்ளனர். அதை தொடர்ந்து படத்தின் முக்கியமான சேசிங் காட்சிகளும், மிகப்பிரமாண்டமான சண்டை காட்சியும் இமாலய மலையில் படமாகிறது. புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இச்சண்டைக்காட்சிகளுக்கு சண்டை பயிற்சி அன்பறிவ். தற்போது நடைபெறும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 12 நாட்கள் குலுமணாலி மற்றும் இமாலய மலைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதோடு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்குகிறது.

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, வாய், பஞ்சகனி, குலுமணாலி, குல்மார்க், இமாலயா, உக்ரைன், லீவின் அண்ட் கியூ, உலகின் உயரமான மலை பிரதேசமான கார் தா ஹாயின் போன்ற பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது..

Comments are closed.