‘பாண்டியநாடு’ படத்தை தயாரித்ததன் மூலம் தன்னை ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடையாளப்படுத்தி இருக்கிறார் விஷால். இப்போது யுடிவி நிறுவனத்துடன் கைகோர்த்து, அடுத்த தயாரிப்பாக ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டார். படத்தின் ஆடியோ ரிலீஸை வரும் மார்ச்-13ஆம் தேதி நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அதேபோல படத்தை தமிழ்ப்பத்தாண்டு ரிலீஸாக ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்..
‘பாண்டியநாடு’ படத்தின் மூலம் விஷாலின் ராசியான ஜோடியான லட்சுமி மேனன் தான் இந்தப்படத்திலும் கதாநாயகி. இனியா இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், சுந்தர் ராமு, ஜெகன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘சமர்’ என விஷாலை வைத்து இரண்டு படங்களை இயக்கிய விஷாலின் ஆஸ்தான இயக்குனரான ‘திரு’ தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். படத்தில் ’ஏலேலோ’ என்ற பாடலை தனியாகவும், ‘இதயம் உன்னை தேடுதே பாடலை சைந்தவியுடன் சேர்ந்தும் பாடியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். படத்தில் தீம் சாங்கோடு சேர்த்து மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
