தந்தையின் பிறந்த நாளுக்காக டெய்லராக மாறிய பாலிவுட் நடிகர்..!

190

பாலிவுட் நடிகர் நடிகர் வருண் தவான் தற்போது ‘சுய் தாகா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வருண் தையல் வேலை பாடு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அதனால் இந்த படத்தின் மூலம் கைத்தறி கலையையும், தையல் வேலைப்பாடு நுட்பங்களையும் சிறப்பாக கற்றுக்கொண்டார்.

இந்தப்படத்தில் பெற்ற அனுபவத்தையும் , தையல் நுட்பத்தையும் வைத்து தன் தந்தை டேவிட் வருணுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு சட்டையை தைக்க முடிவு செய்தார் வருண் தவான். இதற்காக ஒரு அருமையான வண்ணமுடைய கோடைகால துணியை தேர்வு செய்து நீண்ட நாளாக நேரம் எடுத்து சிறப்பாக ஒரு சட்டையை தைத்து தனது தந்தையின் 68-வது பிறந்தநாளில் அவருக்கு பரிசாக வழங்கி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் வருண் தவான்.

Comments are closed.