கமலின் அண்ணனான சாருஹாசனுக்கு 87 வயது.. இந்த வயதிலும் கதை நாயகனாக ‘தாதா 87’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார். மேலும், ஜனகராஜ், ஆனந்த் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்
ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி தயாரித்துள்ள இந்த படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கியுள்ளார்.. மொத்தம் 12 கேரக்டர்களை உள்ளடக்கி கதையமைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் மனித மிருகங்களை வேட்டையாடும் தாதாவாக சாருஹாசன் நடித்துள்ளார்..
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கௌதமி கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு கலந்துகொள்ள வந்த சாருஹாசனை கைத்தாங்கலாக தான் நடத்தி அழைத்து வநதார்கள்..
ச்
படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் இப்படித்தான் கைத்தாங்கலாக நடந்துவந்தாராம் சாருஹாசன்.. ஆனால் கேமரா முன்னாடி நின்று ஆக்சன் என்று சொன்னதும் கம்பீரமான இளைஞர் போல யார் துணையும் இல்லாமல் நீண்ட நேரம் நின்றபடி, நடந்தபடி காட்சிகளில் நடித்து படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தினாராம் சாருஹாசன்.

Comments are closed.