சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” கடைக்குட்டி சிங்கம் “… இப்படம் தமிழில் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல தெலுங்கிலும் ‘சின்னபாபு’ என்கிற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை இந்தியாவின் துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு சமீபத்தில் பார்த்தார். இந்தப்படம் அவரை ரொம்பவே கவர்ந்துவிட்டது.
படத்தை பற்றி அவர் கூறும்போது, “சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்.
நாட்டின் மிகப்பெரிய தலைவர் படத்தை பார்ட்டியுள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து உற்சாகமாகியுள்ளனர் படக்குழுவினர்.

Comments are closed.