மொழி, இன பாகுபாடு இல்லாமல் நல்ல, திறமையான ஆட்களை வரவேற்கிறார்கள் என்பதாலேயே பொதுவாக மற்ற மொழிகளை சேர்ந்த ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் கோலிவுட்டின் மீது ஒரு பெரிய ஆசை உள்ளது. அந்தவகையில் கன்னட திரைப்படம் ‘கர்வ்வா’ மற்றும் மோகன்லால் மற்றும் கௌதமி நடித்த பன்மொழி திரைப்படமான ‘மனமந்தா’ போன்ற திரைப்படங்களில் நடித்த அனிஷா அம்ப்ரோஸ், தமிழ் சினிமாவில் வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கிறார்.
இயக்குனர் மனோஜ் பீதா அனிஷாவிடம் ஸ்கைப் மூலம் ஸ்கிரிப்டை விளக்கி ஒப்பந்தம் செய்துள்ளார்.செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில் நடித்துள்ளார் அனிஷா. “என் முந்தைய படங்களை அவர் பார்த்திருப்பாரா? என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வஞ்சகர் உலகம் ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை என நான் உறுதியளிக்கிறேன்” என்கிறார் அனிஷா.
இவர் இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. வஞ்சகர் உலகம் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண்ட படமாக உருவாகியிருக்கிறது. அனிஷா அம்ப்ரோஸ், சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் ஆகியோர் வஞ்சகர் உலகம் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சிறப்பான பின்னணி இசையை அமைப்பதில் வல்லவரான சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.

Comments are closed.