லாலேட்டனுக்கு ‘த்ரிஷ்யம்’.. மம்முட்டிக்கு ‘பால்யகால சகி’..

203

கடந்த இரண்டு வருடங்களாகவே ஃபார்ம் இழந்து தவித்துவரும் மம்முட்டி தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பது நாளை(பிப்-7) அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பால்யகால சகி’ படத்தைத்தான். இந்தப்படத்தை முன்கூட்டியே பிரிவியூ ஷோ பார்த்துவிட்ட துபாய் சினிமா பாரடைஸ் கிளப்பை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், இந்தப்படம் நிச்சயம் விருதுகளை குவிக்கும் என சத்தியம் செய்யத குறையாக கூறியிருக்கிறார்.

இதில் மம்முட்டிக்கு தந்தை, மகன் என இரண்டு வேடங்கள்.. ஜோடியாக மீனாவும் இஷா தல்வாரும் நடித்திருக்கிறார்கள். முதல் பாதி காமெடி, ஆக்‌ஷன் எனவும் இரண்டாவது பாதி செண்டிமெண்ட்டாகவும் படம் பார்க்கும் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் என்கிறார் படத்தின் அறிமுக இயக்குனரான பிரமோத் பையனூர்.

வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய நாவலைத்தான் அதே பெயரில் படமாக எடுத்திருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு மம்முட்டியை நாயகனாக தேர்வு செய்ததற்கு இயக்குனர் கூறும் காரணம் வித்தியாசமானது. அதாவது இந்தப்படத்தின் கதையை எழுதிய முகம்மது பஷீர் வைக்கத்தை சேர்ந்தவர். இந்த கதையில் வரும் கதாநாயகன் ஊரும் வைக்கம் தான். அதனால் வைக்கத்தில் பிறந்து வளர்ந்த மம்முட்டி இந்த கேரக்டரில் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என மண்ணுக்கேத்த மைந்தராக பார்த்து தேர்வு செய்தாராம் இயக்குனர் பிரமோத்.

மோகன்லாலுக்கு ‘த்ரிஷ்யம்’ போல மம்முட்டிக்கு ஒரு ‘பால்யகால சகி’ என்று சொல்லும் வகையில் இது வெற்றிப்படமாக அமைந்து மம்முட்டியின் சரிந்துகிடக்கும் மார்க்கெட்டையும் தூக்கி நிறுத்துமாம். மோகன்லாலுக்கு மட்டுமல்ல.. மலையாளத்தில் ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் மீனாவுக்கும் ‘த்ரிஷ்யம்’ பேர் வாங்கி கொடுத்தது போல இந்தப்படமும் அமையும் என்கிறார்கள்.

1 Comment
  1. click to find out more says

    557789 770589Its exceptional as your other posts : D, regards for posting . 891704

Leave A Reply

Your email address will not be published.