‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் – இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படம் தான் ‘சீமராஜா’. இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 12வது படமாகும். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.
முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், சூரி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இந்தப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார். இந்தநிலையில் இந்தப்படத்தில் கொஞ்ச நேரமே வந்துபோகும் சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி முருகன், ரெமோ என இரண்டு வெற்றிப்படங்களில் நடித்த இந்த ஜோடி மிகுந்த வரவேற்பை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் வரும் செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக ரிலீஸாக இருக்கிறது

Comments are closed.