‘U’ சான்றிதழ் பெற்றது நடிகையர் திலகம்

231

nadigaiyar thilagam u certificate

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலேயே படமாக எடுத்துள்ளனர். தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரில் படம் வெளியாகிறது.

படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, கதாநாயகனாக ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ளார். சமந்தா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். நாக் அஷ்வின் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் மே-11ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

Comments are closed.