மூன்றாம் முறையாக இணையும் விஜய்சேதுபதி-அருண்குமார்

266

arunkumar-vijaysethupathi film

விஜய்சேதுபதியை வைத்து “ பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது மூன்றாவது முறையாகவும் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இறைவி படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார் மற்றும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இன்னும் பெயரிடப் படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்

பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து மிக பிரமாண்டமான முறையில் இந்த புதிய படத்தை தயாரிக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே தற்போது ‘பியார் பிரேமா காதல்’ என்கிற படத்தை தயாரித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.