ரஜினி படத்தில் மீண்டும் பாலிவுட் வில்லன்..?

213

navasudeen in rajini film

ரஜினி படம் என்றாலே வில்லன்கள் தெலுங்கில் இருந்தும் இந்தியில் இருந்தும் தான் இறக்குமதி செய்யப்படுகின்றனர்.. அதிலும் தயாரிப்பில் உள்ள ரஜினியின் சமீபத்திய படங்களில் ஷங்கரின் 2.O’வில் அக்ஷய் குமார், ‘காலா’வில் நானா படேகர் என பாலிவுட் பிரபலங்களே வில்லன்களாக இடம்பிடித்துள்ளனர்.

அந்தவகையில் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் ரஜினி நடிக்கும் படத்தில் கூட வில்லனாக இந்தி நடிகர் நவாசுதின் சித்திக் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் மும்பைக்கே சென்று நவாசுதினை சந்தித்து கதை சொல்லிவிட்டு வந்துள்ளாராம் கார்த்திக் சுப்பராஜ்.

கதையும் கேரக்டரும் தனக்கு பிடித்துப்போனதால் படத்தில் நடிக்க சம்மதித்து விட்டாராம் நவாசுதின் சித்திக். ஸ்ரீதேவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாம்’ படத்தில் அவருக்கு உதவும் டிடெக்டிவாக நடித்திருந்தார் நவாசுதின் சித்திக்

Comments are closed.