கலையரசனின் த்ரில்லர் ‘முகம்’..!

237

Kalaiarasan

தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்போது கலையரசன் நடித்துவரும் படம் ‘முகம்’.. த்ரில்லர் படமாக உருவாகிவரும் இந்தப்படத்தில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே.சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்ரீதர் என்பவர் இயகியுள்ளார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை பற்றி சொல்லும்போது, “முதல் பாதி படத்திற்கு முற்றிலும் நேர்மாறாக இரண்டாவது பாதி படம் இருக்கும்” என ஒரு சின்ன சஸ்பென்ஸ் மட்டும் வைத்துவிட்டு நழுவுகிறார் கலையரசன்.

Comments are closed.